Saturday, December 24, 2016

குடும்ப அட்டை பெற விரும்புவோர் கவனத்திற்கு ...



Public Distribution System
தமிழ் நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளம்
பொது விநியோகத் திட்டம்

புதிய குடும்ப அட்டை பெற விரும்புவோர் உங்கள் ஊருக்கு அருகில் உள்ள அரசு இ -சேவை மையத்தினை அணுகுங்கள்

பெயர் மாற்றம் , முகவரி மற்றம் , செய்துகொள்ளலாம்

அதிக வெளிப்படைத்தன்மை…..அதிக பொறுப்புடைமை….

அதிக தெரிவுநிலை
மேம்படுத்தப்பட்ட நுகர்வோர் ஆன்லைன் சேவைகள் - பொது வலைதளம், கைபேசி பயன்பாடு, குறுஞ்செய்தி சேவை, அழைப்பு மையம், மின்னஞ்சல்

தமிழ் நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தினைத் தானியக்க செயல்பாடாக மாற்ற திட்டமிட்டுள்ளது – கைமுறை செயல்பாட்டிலிருந்து தானியங்கி முறை

குடும்ப அட்டை மேலாண்மை
அட்டை தொடர்பான விண்ணப்ப நிலை
புகாரைப் பதிவு செய்ய
கருத்து
குறைகளின் நிலைமை
பொது விநியோகத் திட்ட அறிக்கைகள்
காணொளி தொகுப்பு
புகைப்பட தொகுப்பு

இலவச உதவி மைய எண் 1967 அல்லது 1800-425-5901 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

இணையதள முகவரி
https://tnpds.com/

Saturday, December 17, 2016

கல்விச்சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?

கல்விச்சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?


📔 பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (ஏநசகைiஉயவழைn) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

📔 ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை.

📔 தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும்.

நடைமுறைகள் :

📔 முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

📔 அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

📔 இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

📔 பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.

📔 இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

📔 சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

📔 பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

📔 மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

📔 அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

📔 சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

📔 இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்.

தனித்தேர்வர்களுக்கு :

📔 தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

குறிப்பு :

📔 பள்ளிஃகல்லு}ரி மாற்றுச் சான்றிதழ்கள், பள்ளிஃகல்லு}ரி மதிப்பெண் சான்றிதழ்கள் புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியரையோ அல்லது கல்லு}ரி முதல்வரையோ அணுகி மேலதிக விவரங்களையும், கட்டண விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை

Wednesday, December 14, 2016

PAN கார்டு பெறுவது எப்படி ?

வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கும், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் அடிப்படைத் தேவை பான் கார்டு (PAN card – Permanent Account Number Card) எனப்படும் நிரந்தரக் கணக்கு எண் அட்டை. பான் கார்டுக்கு எங்கே விண்ணப்பிப்பது? குழந்தைகளுக்கும் வாங்க முடியுமா? பான் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வது? ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் இங்கே….
பான் கார்டு என்பது என்ன?
ஆங்கில எழுத்துக்களும், எண்களும் கலந்த பத்து இலக்க எண் கொண்ட புகைப்பட அடையாள அட்டையான இது, இந்திய அரசின் நிதி அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.
பான் கார்டின் அவசியம்
1.    வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய
2.    பங்குகளை வாங்க மற்றும் விற்பதற்கான டீமேட் கணக்கைத் துவக்க
3.    வங்கியின் ஒரு கணக்கிலிருந்து மற்றொன்றுக்கு  50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை மாற்ற / டெபாசிட் செய்ய / கணக்கிலிருந்து எடுக்க
4.    வரி கழித்த தொகையை திரும்பப் பெற ஆகியவற்றுக்கு அவசியம்.
பான் கார்டு பெறுவதற்கான தகுதிகள்
இந்தியக் குடிமக்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். பான் கார்டு பெறுவதற்கு வயது வரம்பு இல்லை. குழந்தைகளுக்குக்கூட பான் கார்டு பெற முடியும். பான் கார்டு பெறுவதற்கு ஒரு குழுமமோ, நிறுவனமோ,  சங்கமோ, தனி நபரோ விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
இந்தியாவில் வசிப்பவர்களுக்கு 96 ரூபாய் கட்டணமும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு 962 ரூபாய் கட்டணமும் பெறப்படுகிறது. ஏஜெண்டுகள் மூலம் விண்ணப்பித்தால் 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை செலவாகும்.
எங்கே விண்ணப்பிப்பது?
மத்திய வருமானவரித் துறையின் அங்கீகாரம் பெற்ற யூ.டி.ஐ.டெக்னாலஜி சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் இதற்கான சேவை மையங்களைத் திறந்துள்ளது. இங்கு சென்று நேரடியாக விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். இந்தியர்கள் 49 A என்ற விண்ணப்பத்தையும், வெளிநாட்டில் வசிப்பவர்கள் 49 A A என்ற விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவத்தை  https://www.tin-nsdil.com/  என்ற தளத்திற்குச் சென்றும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்
பான் கார்டு பெற அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று மற்றும் பிறந்த தேதி சான்று தேவை.
1.    அடையாள மற்றும் இருப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இருப்பிடச் சான்றாக கடைசி 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் போன்றவற்றின் நகல்களைக் கொடுக்கலாம்.
2.    பிறந்த தேதிச் சான்றாக பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளிச் சான்றிதழ் கொடுக்கலாம்.
3.    விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றிதழ்கள் போதுமானவை. மைனர் விண்ணப்பதாரருக்குப் பிறப்புச் சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
4.    ஒருவேளை மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
மீண்டும் பான் கார்டு பெற : ( Missed Pan card Again Apply )
ஏற்கெனவே பான் கார்டு வழங்கப்பட்டு ஒருவேளை தொலைந்து போயிருந்தாலோ / சேதமாகியிருந்தாலோ மீண்டும் அதே பான் நம்பரை வைத்து விண்ணப்பிக்கலாம். இதற்கும் மேற்கூறிய சான்றுகள் தேவை. புதிய பான் கார்டுக்கான கட்டணமே இதற்கும் பொருந்தும். அப்படிப் பெறும்போது ஏற்கெனவே உள்ள எண்ணே வழங்கப்படும்.
பான் கார்டில் பெயர் மாற்றமோ, பிறந்த தேதி மாற்றமோ, வேறு திருத்தங்களோ செய்ய வேண்டுமெனில் அதற்கான ஆதாரங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே பான் நம்பர் வைத்திருப்பவர்கள் மீண்டும் மற்றுமொரு பான் நம்பரைப் பெற முடியாது. அப்படிப் பெறுவதும் / வைத்திருப்பதும் சட்டப்படிக் குற்றமாகும்.

பான் கார்டு பெற விரும்புவோர்  உங்கள்  பகுதில் உள்ள  அரசு இ-சேவை மையத்தில்  பதிவுசெய்து  பெற்று கொள்ளலாம்